சமந்தாவை சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. எங்கு, என்ன விசேஷம்? போட்டோ வைரல்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom என்ற வெப் தொடர் உருவாகவுள்ளது. மேலும் பங்காராம் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார்.
தற்போது, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அவ்வப்போது வெளிநாட்டில் ட்ரிப் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், சமந்தாவை நடிகை கீர்த்தி சுரேஷ் சந்தித்திருக்கிறார்.
இரண்டு பேரும் உணவு அருந்தும்படி இருந்த புகைப்படத்தை பகிர்ந்து, "மதிய உணவுக்கு அமர்ந்தோம். சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு எழுந்தோம்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.