இனி சீரியலில் நடிக்கமாட்டேனா? இதுதான் காரணம்.. நடிகை மைனா உடைத்த அந்த விஷயம்

இனி சீரியலில் நடிக்கமாட்டேனா? இதுதான் காரணம்.. நடிகை மைனா உடைத்த அந்த விஷயம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் ரசிகர்களால் அந்த பெயரையே கொண்டு அழைக்கப்பட்டார்.

சீரியலை தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க தொடங்கியவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார்.

பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்துகொண்ட இவர் அதன்பின், சின்னத்திரை பக்கமே வரவில்லை. தற்போது மைனா, சீரியலில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இனி சீரியலில் நடிக்கமாட்டேனா? இதுதான் காரணம்.. நடிகை மைனா உடைத்த அந்த விஷயம் | Actress Myna Open Up About Her Serial Rejectionஅதில், " நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு எடுத்தது கிடையாது. ஆனால் சில வருடங்களாக எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் படங்களில் நடிப்பதால் இனி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று நினைத்து விட்டனர். ஆனால், நான் பார்க்கும் அனைத்து இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் எனக்கு வேலை தருமாறு கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்.

சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன். நான் எப்போதுமே சீரியலில் நடிக்க கூடாது என்று ஒதுங்கியது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.    

இனி சீரியலில் நடிக்கமாட்டேனா? இதுதான் காரணம்.. நடிகை மைனா உடைத்த அந்த விஷயம் | Actress Myna Open Up About Her Serial Rejection

LATEST News

Trending News