எப்புட்ரா.. +2வில் நடிகர் சூரியா மகள் தியா பெற்ற மதிப்பெண்.. ரசிகர்கள் ஷாக்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் மூத்த மகள் தியா, 2024 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்று சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்ற தியா, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 581 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக ஒரு தகவல் வெளியாகியது.
பாட வாரியாக, தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 94, இயற்பியலில் 99, வேதியியலில் 98, மற்றும் கணினி அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறப்பட்டது. இது சூர்யா மற்றும் ஜோதிகாவின் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு மே மாதம் தியாவின் வயது 16 ஆக இருந்ததால், அவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க முடியுமா..? எப்புட்ரா..? என்ற சந்தேகம் எழுந்தது.
சில இணைய தளங்கள் இதை தவறான தகவல் என்று குறிப்பிட்டன. மேலும், சூர்யாவின் குடும்பம் தற்போது மும்பையில் வசிப்பதாகவும், தியா அங்குள்ள திருபாய் அம்பானி பள்ளியில் பயின்று வருவதாகவும் தகவல்கள் உள்ளன.
2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா 500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று சிறப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. தியாவின் கல்வியில் சூர்யா மற்றும் ஜோதிகா பெரும் அக்கறை காட்டி வருகின்றனர்.
சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருவது போல, தனது குழந்தைகளின் கல்வியிலும் முன்மாதிரியாக இருக்கிறார்.
தியாவின் மதிப்பெண்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அவரது கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.