"கூலி" படத்தின் தலைப்பு திடீர் மாற்றம்! என்ன காரணம்? புதிய தலைப்பு இதோ!

"கூலி" படத்தின் தலைப்பு திடீர் மாற்றம்! என்ன காரணம்? புதிய தலைப்பு இதோ!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. 

ஆரம்பத்தில், இப்படம் ஹிந்தியில் ‘மஜ்தூர்’ (Majdoor) என்ற பெயரில் வெளியாகும் என போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த டைட்டில் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களையும், ட்ரோல்களையும் எதிர்கொண்டது. பலர் இதனை மோசமான முடிவு எனக் கருத்து தெரிவித்தனர். 

இதனையடுத்து, விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், படக்குழு ஹிந்தி டைட்டிலை மாற்றியுள்ளது. ‘கூலி: த பவர்ஹவுஸ்’ (Coolie: The Powerhouse) என புதிய டைட்டிலை அறிவித்து, 

லேட்டஸ்ட் போஸ்டர்களில் இதனை பயன்படுத்தியுள்ளனர். இந்த மாற்றம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இப்படம், ரஜினியின் மாஸ் தோற்றத்துடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News