அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
நடிகை அனுஷ்கா செட்டி கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சையில் இருந்தது தான்.
தற்போது மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அவர். அவரது அடுத்த படமான காட்டி வரும் ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் பிரபுவும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ரிலீஸ் தள்ளி போவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு தள்ளி வைக்கப்பட்டு, புது தேதியாக ஜூலை 11 அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த தேதியிலும் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.