பட்டுப்புடவை.. தனி அறையில் காதலனுடன் சீரியல் நடிகை.. அது தெரியாம நடந்துடுச்சாம்.. வைரல் வீடியோ..
நடிகை ரிஹானா பேகம் சீரியல் நடிகையாக அறியப்படும் இவர் Youtube பேட்டிகளில் தன்னை ஒரு பெண்ணிய போராளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
பெண்களின் விடுதலை மற்றும் பெண்களின் உரிமை சார்ந்த இவருடைய பெரும்பாலான பேட்டிகள் இருக்கும் இப்படிப்பட்ட ஒருவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ராஜ் கண்ணன் ( அவர் உண்மையான பெயர் அழகர் சாமி என்கிறார் ரிஹானா) என்பவர் நடிகை ரிஹானா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார் என்று ராஜ் கண்ணன் நடிகை ரிஹானா மீது புகார் கொடுத்திருக்கிறார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகை ரிஹானா செய்துள்ள கூத்துகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆள்திருக்கிறது. அவர் ராஜ் கண்ணனை திருமணம் செய்யததை மறுக்கவில்லை. மாறாக அந்த திருமணம் எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
இங்கே தான் ரசிகர்களுக்கு குழப்பம். காரணம், தனி அறையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு கழுத்தில் தங்க நகை அணிந்து கொண்டு ஒரு திருமணத்திற்கு செல்லக்கூடிய பெண்கள் போல காட்சியளிக்கிறார் ரிஹானா.
காதலனை நெருக்கமாக கட்டி அணைத்தபடி நின்று இருக்கிறார் நடிகை ரிஹானா. அந்த நேரத்தில் தாலி கட்டுகிறார் இவருடைய காதலன். இந்த புகைப்படத்தை உற்று நோக்கும்போது இருவரும் தெளிவாக இருக்கிறார்கள் போதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
நடிகை ரிஹானாவும் நான் போதையில் இருந்தேன் என்று போட்டியில் சொல்லவில்லை. ஆக, தெளிவாக இருக்கும் போது திருமணத்திற்கு சென்ற பெண் போல ஆடை அணிந்து கொண்டு சென்று.. காதலனை காற்று போக முடியாத அளவுக்கு நெருக்கமாக நின்று கொண்டு கழுத்தில் தாலி கட்டிக் கொள்கிறார் ரிஹானா.
ஆனால், இது எனக்கு தெரியாமல் கட்டி விட்டீர்கள்.. என்று இரண்டு நாட்கள் கழித்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். இது என்ன விவரம் என்று நடிகை ரிஹானா தான் விளக்கமாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் இதுவே இவருக்கு மிகப்பெரிய சிக்கலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த இணையவாசிகள்.