தகுதி குறித்து சிறகடிக்க ஆசை நாயகி கோமதி ப்ரியா.. பரபரப்பு வீடியோ
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சீரியல்களில் நாயகியாக நடித்து மக்களின் பேவரெட் லிஸ்டில் இருப்பவர் கோமதி ப்ரியா.
கடந்த 2018ம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓவியா என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர்.
அதன்பின் விஜய் டிவியில் வேலைக்காரன், இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார் கோமதி.
இந்நிலையில், இவர் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஜடாயு பாறை கோயிலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த அவர் சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில், " சில நேரங்களில் உங்களுக்குத் தேவையானவற்றை வாழ்க்கை கொடுக்காமல் இருக்கலாம். அதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்பது அல்ல; கடவுளுக்குத் தெரியும் உங்களுக்குத் தகுதியானது எது என்று" என பதிவிட்டுள்ளார்.