பெரும் விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்? கொந்தளித்த நடிகை!

பெரும் விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்? கொந்தளித்த நடிகை!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர் காஜல் அகர்வால். ஹிந்தியில் முதலில் அறிமுகமானவர் பின் தெலுங்கு பக்கம் வந்து ஹிட் படங்கள் கொடுக்க பேரரசு இயக்கிய பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடைசியாக தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் அம்மன் பார்வதியாக வந்து கலக்கினார். இந்நிலையில், காஜல் அகர்வால் பற்றி வைரலாக ஒரு செய்தி பரவி வந்தது.

அது என்னவென்றால், அவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் என கூறப்பட்டது. தற்போது, இந்த செய்திக்கு காஜல் அகர்வால் அவரது ட்விட்டர் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

பெரும் விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்? கொந்தளித்த நடிகை! | Is Kajal Meet With An Accident

அதில், " நான் விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாக வரும் செய்திகளை பார்த்தேன். உண்மையில் இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது முற்றிலும் பொய்.

கடவுளின் கருணையால் நான் நலமாக இருக்கிறேன் என உறுதிப்படுத்துகிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பவோ நம்பவோ வேண்டாம்" என காஜல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.   

LATEST News

Trending News