தயாரிப்பாளர் ஆனதும் அதிகரித்த ரவி மோகன் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..

தயாரிப்பாளர் ஆனதும் அதிகரித்த ரவி மோகன் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..

ரவி மோகன் சமீபத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இதற்காக பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ப்ரோ கோட், An Ordinary Man ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் An Ordinary Man எனும் படத்தை ரவி மோகன் இயக்குகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஆனதும் அதிகரித்த ரவி மோகன் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா.. | Ravi Mohan Salary For Bro Code Movie

இந்த நிலையில், ப்ரோ கோட் படத்தை தயாரித்து நடிக்கும் ரவி மோகன் இப்படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது இதற்கு முன் மற்ற படங்களில் இவர் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என கூறுகின்றனர்.

இப்படத்தில் மற்றொரு முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். மேலும் இப்படத்தை ரூ. 70 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News