ரவி மோகன் பிறந்தநாளில் பராசக்தி டீம் செய்திருக்கும் சம்பவம்… பாக்கவே மெர்சலா இருக்கே!

ரவி மோகன் பிறந்தநாளில் பராசக்தி டீம் செய்திருக்கும் சம்பவம்… பாக்கவே மெர்சலா இருக்கே!

பிரபல நடிகர் ரவி மோகன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்காக பராசக்தி டீம் செய்திருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. 

சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு படம் திடீரென தள்ளிப்போனது. தற்போது அந்த படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். 2டி நிறுவனம் வெளியேற அவர்களுக்கு பதில் டவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

ஆதி பகவன் திரைப்படத்துக்கு பின்னர் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். அதுவும் முதல் முறையாக இன்னொரு நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டதே ஆச்சரியமான விஷயமாக மாறி இருக்கிறது. 

1980களில் நடக்கும் இப்படத்தின் கதை பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது. வித்தியாசமான முரட்டு வில்லனாக ரவி மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. லவ்லி கேரக்டரில் நடித்து வந்த ரவி மோகன் ஆக்‌ஷன் ரோலை சமீபகாலமாக கையில் எடுத்து இருக்கிறார். 

ravimohanஅந்த வகையில் பராசக்தி படத்தில் அவருடைய கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு டவுன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது. 

மாஸான லுக்கில் ஜெயம் ரவியை பார்க்கும் போதே படத்தின் மீதான வரவேற்பும் அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் பொங்கல் ரீலிஸை குறி வைப்பதாக கூறப்படுகிறது. அதே நாளில் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாக இருப்பதால் படத்தின் வசூல் அடி வாங்கும் எனவும் பேச்சு அடிப்படுவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News