சாய் பல்லவிக்கு என்னதான் ஆச்சு? தமிழ் பக்கமே காணாமே...
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்த நடிகைகளின் லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. ஒரு படத்தில் சாய் பல்லவி இருந்தாலே அவரை நம்பி போகலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார்.
கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பான கொள்கையுடன் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அமரன் படத்திற்கு பின் சாய் பல்லவி தமிழில் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்காக சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சிகல் எடுக்கப்பட்டதாகவும், அந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி நிராகரித்து விட்டதாகவும் பேச்சு எழுந்து வருகிறது.
சமீபத்தில் சாய் பல்லவிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்த நிலையில் சாய் பல்லவி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தன்னுடைய சகோதரி பூஜா கண்ணனுடன் இணைந்து நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.