முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமண வாழ்க்கை!! நீதிமன்றம் உத்தரவு
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், தன்னுடைய காதல் மனைவியும் பாடகியுமான சைந்தவியை 12 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். கடந்த ஆண்டு இருவரும் தாங்கள் பிரியவுள்ளதாக கூறி விவாகரத்து மனுவை அளித்திருந்தனர்.
இந்த வழக்கு சில மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், குழந்தை சைந்தவியுடன் வளர்வது தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கோர்ட்டில் ஜி வி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்திரவிட்டார் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி.