ரஜினிகாந்தின் அதிகபட்ச ஆசை இதுதான்...இப்போ மார்க்கெட்டே வேறலெவல்...

ரஜினிகாந்தின் அதிகபட்ச ஆசை இதுதான்...இப்போ மார்க்கெட்டே வேறலெவல்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். 2026 ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ்யாகும் என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருந்தார். எப்போது ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசிய சில கருத்துக்கள், வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும். அந்தவகையில் ரஜினியின் ஆரம்பகாலக்கட்டத்தில் அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்த விசயம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் அதிகபட்ச ஆசை இதுதான்...இப்போ மார்க்கெட்டே வேறலெவல்... | Rajini Highest Wish In His Starting Stage Career

ரஜினியின் அதிகபட்ச ஆசையாக இருந்தது, ஒரு வீடு, கார், ஸ்கூட்டர் போன்றவை சொந்தமாக வாங்கவேண்டும் என்பது தான். நடிக்க வந்த புதிதில் அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்து இந்த விஷயங்கள் தான். ஆனால் தற்போது ரஜினியின் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது.

50 ஆண்டுகாலமாக தன் மார்க்கெட்டை உயர்த்தி வரும் ரஜினி, 16 வயதினிலே படத்திற்காக ரூ. 3000 சம்பளமாக பெற்றிருக்கிறார். அப்போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த கமலுக்கு ரூ. 30000 சம்பளமும் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவிக்கு ரூ. 25000 சம்பளமும் வாங்கினர்.

அப்படி படிப்படியாக ரஜினி முன்னேறி பாசிட்டிவ், நெகட்டிவ் ரோலில் நடித்து தற்போது தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரியளவில் உயர்த்தியிருக்கிறார். 

LATEST News

Trending News