ரோபோ ஷங்கர் இறுதி ஊர்வலத்தில் மனைவி டான்ஸ் ஆட இதுதான் காரணம்!! நடிகர் போஸ் வெங்கட்...
தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்த நடிகர் ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18 ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தும், தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று ரோபோ ஷங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ ஷங்கரின் மரணம் குறித்தும், அவரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடியதும் விமர்சனத்திற்கு உள்ளானது. கட்டிய புருஷன் பாடையில் போகும் போது ஒரு பொண்டாட்டி இப்படித்தான் ஊரே பார்க்க நடுத்தெருவில் டான்ஸ் ஆடுவதா என்று ரோபோ ஷங்கர் மனைவியை பலரும் விளாசினார்கள்.
கணவரை இழந்த சோகத்தில் செய்வது அறியாமல் பிரியங்கா டான்ஸ் ஆடியதை பலரும் ஆதரவும் கொடுத்தனர். அதில் எஸ் வி சேகர், ரோபோ ஷங்கரின் மனைவியை விமர்சிக்கும் அருகதை யாருக்கும் இல்லை என்று அவருக்கு ஆதரவளித்து வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா ஆடியதற்கான காரணத்தை நடிகரும் ரோபோ ஷங்கரின் குடும்ப நண்பருமான போஸ் வெங்கட், நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
அதில், ரோபோ ஷங்கர், பிரியங்கா எப்போதும் ஜாலியாக நடனமாடிக்கொண்டே இருந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, அன்பு மொழியாக இருந்தது டான்ஸ் தான். நான் பொதுவாக டான்ஸ் ஆடமாட்டேன். ஆனால் ஷங்கர் என் அருகில் இருந்தால் என்னையும் டான்ஸ் ஆட வைத்துவிடுவார்.
நடனம் என்பது எங்களுக்கு ஒரு மொழியாக இருந்தது. அந்த மொழி மூலம் பேசிக்கிட்டோம். ஷங்கர், பிரியங்கா இருவரின் வாழ்க்கையில் இருர்ந்து நடனத்தை பிரிக்க முடியாது. அதனால் தான் அவர் டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை யாரும் தவறாக பேச வேண்டாம் என்று போஸ் வெங்கட் கூறியிருக்கிறார்.