63 வயதில் 37 வயது நடிகையுடன் திருமணம்!! விண்வெளியில் 4வது கல்யாணத்தை முடிக்கும் நடிகர்..
ஹாலிவுட்டில் டாப் நடிகராக திகழ்ந்தும், யாரும் செய்யாத ஸ்டண்ட் காட்சிகளை ரிஸ்க் எடுத்து செய்யும் கலைஞராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் டாம் க்ரூஸ்.
நீண்டகாலமாக நடிகை அனா டி அர்மாஸ்-ஐ காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியது. கிட்டத்தட்ட 26 வயது குறைவான நடிகை அனா டி அர்மாஸை நடிகர் டாம் க்ரூஸ் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்து கொண்டோ இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
டாப் க்ரூஸ் ஏற்கனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும் அனா டி அர்மாஸ் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.