நிச்சயம் நடந்த சில தினங்களில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா.. என்ன ஆனது?

நிச்சயம் நடந்த சில தினங்களில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா.. என்ன ஆனது?

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன.

நிச்சயம் நடந்த சில தினங்களில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா.. என்ன ஆனது? | Vijay Deverkonda Met With An Accident Details

சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து 4 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா திடீரென விபத்தில் சிக்கி இருக்கிறார்.

தெலுங்கானாவின் உண்டவல்லி என்ற இடத்தில் விஜய் தேவரகொண்டாவின் கார் மீது மற்றொரு கார் மோதி இருக்கிறது. அதிஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தான் நன்றாக இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

LATEST News

Trending News