நடு ராத்திரி.. இரண்டு நடிகைகளுடன் கார் ரேஸ் ஓட்டிய ரஜினிகாந்த்.. ராதிகா சொன்ன சூப்பர் சீக்ரெட்

நடு ராத்திரி.. இரண்டு நடிகைகளுடன் கார் ரேஸ் ஓட்டிய ரஜினிகாந்த்.. ராதிகா சொன்ன சூப்பர் சீக்ரெட்

ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த வயதிலும் பரபரப்பாக நடித்து வரும் அவரை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் கூலி படத்தில் நடித்த பிறகு இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் என்ற பெயரை கேட்டாலே அனைவருமே காந்தவிசையால் ஈர்க்கப்படுவார்கள். இவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு உண்மை தானடா என பாட்ஷா படத்தில் வைரமுத்து எழுதிய வரிக்கு ஏற்ப ரஜினிகாந்தின் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது என்பதுதான் எதார்த்தம். தற்போதைய இளம் நடிகர்கள் ஒரு படம் நடிப்பதற்கே சலித்துக்கொள்ளும் வேலையில் 70 வயதாகியும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் அணுகுவதை ரஜினிகாந்த் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை.

கமல்ஹாசன்,விஜய்யை வைத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்த திரைப்படம் கூலி தரமான சம்பவத்தை செய்யும் என்று அனைவருமே எதிர்பார்த்தார்கள். லோகேஷும் தனது பங்குக்கு பான் இந்தியா ஸ்டார்களை இந்த படத்தில் களம் இறக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் லோகேஷின் மேக்கிங்கையும் ரசிகர்கள் படு பயங்கரமாக கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் ரிசல்ட் இப்படி வரும் என ரஜினிகாந்த் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. எப்படியும் இப்படம் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கும் என்று அவருமே நம்பி இருந்தார். ஆனால் படம் பயங்கரமாக ஏமாற்றிவிட்டது. வசூலிலும் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்காததால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரஜினியும் கொஞ்சம் அப்செட் என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க மீண்டும் சன் பிக்சர்ஸுடன் கூட்டணி வைத்து ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. முதல் பாகம் போலவே இந்த பாகமும் பாசிட்டிவ் ரிசல்ட் பெற வேண்டும் என நெல்சன் திலீப்குமார் கடுமையாக உழைத்து வருகிறார்.

ரஜினியை பொறுத்தவரை இன்னும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துவிட்டார். இந்தியாவில் அவர் பெயரை சொன்னால் எல்லோருமே செவிமடுத்து கேட்பார்கள். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் தன்னுடன் பழகுபவர்களிடம் இன்னமும் அதே எளிமையோடும் ஈகோ இல்லா தன்மையுடன்தான் பழகி வருகிறார். அப்படி அவ்ரது கரியர் ஆரம்பத்தில் நடந்த ஒரு விஷயம் பற்றி ராதிகா பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா, "போக்கிரி ராஜா படத்தில் நான் ரஜினியுடன் நடித்தபோது சில சமயங்களில் நள்ளிரவு இரண்டு, மூன்று மணிக்கு ஷூட்டிங் முடியும். அப்போது நான், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே யார் முதலில் வீட்டுக்கு செல்வது என்று கார் ரேஸ் எல்லாம் வைத்துக்கொள்வோம். அதேபோல் அவர் பாம்பை கையில் பிடித்து கலாட்டா செய்வார். நான் ஓடி விடுவேன். ஸ்ரீதேவியோ மம்மி மம்மி என்று அழுதபடி இருப்பார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தலைவர் செம ஜாலியா இருந்திருக்காரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News