எனக்கு சின்ன வயசுல இருந்து அந்த பிரச்சனை இருக்கு!! சீரியல் நடிகை ஆலியா மானசா ஓபன் டாக்..
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஆலியா மானசா. தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற சீரியலில் நான் இசை என்ற ரோலில் தற்போது நடித்து வருகிறார். மேலும், சிங்கிள் பசங்க நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.
சீரியல் பற்றி சமீபத்தில் பேசிய ஆலியா, சீரியலில் எனக்கு சரியாக காது கேட்காது. நிஜமாகவே என்னுடைய ரியல் வாழ்க்கையில் எனக்கு கொஞ்சம் காது கேட்காது. அதற்காக காதே கேட்காது என்று சொல்லிட முடியாது.
யாராவது பேசினால் அதற்கு என்னால் உடனே பதிலளிக்க முடியாது. என்ன சொன்னீங்க என்று ஒன்றுக்கு ரெண்டு முறை கேட்டுவிட்டு தான் பதில் சொல்வேன். இது எனக்கு சிறுவயதில் இருந்தே நடக்கிறது.
அது தான் அந்த பாரிஜாதம் சீரியல் கதையில் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் ஆலியா மானசா.