நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பு.. தந்தையின் காலில் விழுந்து அழுத வனிதா விஜயகுமார்.. எப்போ நடந்தது தெரியுமா?

நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பு.. தந்தையின் காலில் விழுந்து அழுத வனிதா விஜயகுமார்.. எப்போ நடந்தது தெரியுமா?

வனிதா விஜயகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் Mrs&Mr என்ற படம் வெளியானது. மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் அவரும், அவரது மகள் ஜோவிகாவும் அப்செட்டில் இருக்கிறார்கள். ஏகப்பட்ட கடனை வாங்கித்தான் இந்தப் படத்தை தயாரித்தார்கள். எனவே இந்தத் தோல்வியால் பொருளாதார ரீதியாகவும் அடி விழ வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓட ஆரம்பித்திருக்கிறது.

ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமான வனிதா விஜயகுமார்; அந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்து செட்டிலானார். ஆனால் முதல் திருமணத்தில் அவருக்கு நிம்மதி கிடைக்காததால்; அவ்வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார். அதற்கு பிறகு இரண்டு திருமணங்கள் செய்தும் அவருக்கு மண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. எனவே அந்த உறவுகளிலிருந்து சட்டென்று வெளியே வந்து இப்போது சிங்கிளாக இருக்கிறார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு; பிறகு வெளியே வந்த வனிதா; அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகள் ஜோவிகாவை தயாரிப்பாளராக்கி Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். இதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் என பலர் நடித்திருந்தார்கள். ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது.

இது ஒருபக்கம் இருக்க இளையராஜா இசையமைத்திருந்த ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம்வரை இளையராஜா சென்றது; இந்த விவகாரம் குறித்து பேசிய வனிதா; சில விஷயங்களை குறிப்பிட்டது என பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக அந்தப் பிரச்னை ஓய்ந்ததாகவே தெரிகிறது.

தியேட்டர்களில் படம் பலத்த அடியை வாங்கினாலும் எப்படியாவது ஓடிடியிலாவது கொஞ்சம் பணம் பார்த்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் இயக்குநர். ஆனால் எந்த ஓடிடி நிறுவனமும் இப்படத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து வழிகளிலும் இந்தப் படத்தால் வனிதா நஷ்டத்தைத்தான் சந்தித்திருக்கிறார்; கண்டிப்பாக பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் திரைத்துறையிலிருந்து பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் தனது தந்தையுடனான பிரச்னை குறித்து வனிதா கொடுத்த பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "எனக்கும் அப்பாவுக்கும் பிரச்னை வந்தபோது அம்மா உயிரோடு இருந்தார். அவர்தான் என்னிடம், 'நீ வீட்டுக்கு வந்து அப்பாட்ட பேசு' என கூறினார். நானும் சென்றேன். வீட்டில் அவர் படியில் இறங்கிவருகிறார். நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன். இதில் யார் சாரி யார் தவறு என்பதற்கெல்லாம் நான் செல்லவில்லை.

நான் ரைட். அவர் தவறு. நீண்ட கேப்புக்கு பிறகு அப்போதுதான் அவரை பார்த்தேன். உடனே நான் அவரை கட்டிப்பிடித்து அழுது; காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அவரும் அழுதார். எல்லாமே நார்மலாக வந்தது. ஆனால் மீண்டும் பிரச்னை வெடித்துவிட்டது" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்து அப்படியே தந்தையுடன் சேர்ந்திருக்கலாமே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

LATEST News

Trending News