ஒரே படத்தில் உச்சத்தை அடைந்த நடிகை..கூகுள் தேடலில் இவர் தான் டாப்...
பாலிவுட்டில் 2017ல் வெளியான மாம் என்ற படத்தில் மூலம் திரைத்துறையில் அறீமுகமானார் நடிகை த்ரிப்தி டிம்ரி.
லைலா, மஜ்னு, புல்புல் போன்ற படங்களில் நடித்து வந்த த்ரிப்தி, நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான அனிமல் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.
சில நிமிட காட்சிகளில் மட்டுமே த்ரிப்தி நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம், அவர் நடித்த காட்சிகள் ஒரே இரவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.
இப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து த்ரிப்தி, பேட் நியூஸ், பூல் புலையா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் த்ருப்தி டிம்ரி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மிகப்பெரிய கணவத்தையும் ஈர்த்து வருகிறார்.