15 ஆண்டு அவருக்காக காத்திருந்தேன்.. பல சிக்கல்கள்.. கீர்த்தி சுரேஷின் காதல் கதை!

15 ஆண்டு அவருக்காக காத்திருந்தேன்.. பல சிக்கல்கள்.. கீர்த்தி சுரேஷின் காதல் கதை!

தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி மொழிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு வெளியான 'கீதாஞ்சலி' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த அவர், அப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல வாய்ப்புகளைப் பெற்றார். பின்னர், தனுஷ், சிவகார்த்திகேயன்,விஜய்,விக்ரம், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது காதலனை திருமணம் செய்துகொள்ள சுமார் 15 ஆண்டுகள் காத்திருந்ததாக நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் 'ஜெயம்மு நிஷ்யம்முரா' என்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஜகபதி பாபு, கீர்த்தி சுரேஷின் அறிய குழந்தை பருவப் புகைப்படங்களை காட்டி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது, நடிகை கீர்த்தி சுரேஷ், தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், என் கணவர் ஆண்டனி தட்டில், சிறப்புமிக்க நபர். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே ஒருவரையொருவர் நேசித்தோம். ஆனால், அந்த நேரத்தில் எங்களது நாங்கள் எங்கள் வேலையில் கவனமாக இருந்ததால், உங்கள் உறவை வெளிப்படுத்தவில்லை. என் கணவர் ஆண்டனி தட்டில் கத்தாரில் பிஸ்னஸ் செய்து வந்தார். இருவரும் ஐந்து ஆண்டுகள் பார்த்துக்கொள்ளாமலே உறவில் இருந்தோம். நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதலை பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் இருந்ததால், இதைப் பற்றிச் சொல்ல சரியான நேத்திற்காக காத்திருந்தேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் என் காதல் விஷயத்தை அப்பாவிடம் சொன்னேன். அவர் எந்தக் கோபமும் இல்லாமல் காதலை ஏற்றுகொண்டார். நான் அப்பாவிடம் ஆண்டனியைப் பற்றி சொன்ன போது, அவர் உனக்குப் பிடித்திருந்தால் போதும் என்றார். அந்த வார்த்தை எனக்கு பெரிய பலத்தை கொடுத்தது. அதன் பின் தான் இருவீட்டினரும் கலந்து பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்காக 15 வருடங்கள் காத்திருந்தேன். எங்களது 15 வருட காதல் வாழ்க்கையில் பல தடைகளைச் சந்தித்தோம். ஆனால், அந்த தடைகளை தாண்டி இன்று திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறோம். எங்களின் திருமணம் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடந்ததால், அனைவரையும் அழைக்க முடியவில்லை. அழைக்க முடியாத அனைவருக்கும் என் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் பேசினார். நடிகை கீர்த்தி சுரேஷ் 'ரவுடி ஜனார்தன்' படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News