ஜாய் கிரிசில்டா நினைக்கிறது நடக்காது - மாஸாக பதில் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா நினைக்கிறது நடக்காது - மாஸாக பதில் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது சர்ச்சைக்கு தீர்வு காண்பேன் என விளக்கமளித்துள்ளார்.

 சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

ஜாய் கிரிசில்டா நினைக்கிறது நடக்காது - மாஸாக பதில் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatti Rangaraj Explains The Controversies

கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இதன்படி விசாரணைகளும் நடத்தபட்டன. இது பெரிதாக கைகொடுக்காத காரணத்தினால் மகளீர் மன்றத்தில் புகார் கொடுத்தார் ஜாய் கிரிசில்டா.

இதன்படி மாதம்பட்டி ரங்கராஜை மகளீர் மன்றம் 15ம் திகதி நேற்று ஆஜராகும்படி உத்தரவிட்டது. இதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சைகளுக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜாய் கிரிசில்டா நினைக்கிறது நடக்காது - மாஸாக பதில் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatti Rangaraj Explains The Controversies

இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா இப்போது என்மேல் எழப்பியிருக்கும் சர்ச்சையை நீதிமன்னறத்திற்கு செல்லாமல் வெளியே தீர்க்கும் படி பலர் கூறுகிறார்கள். 

நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும், இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதை மிகவும் தெளிவாக கூறுகிறேன். 

இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.

ஜாய் கிரிசில்டா நினைக்கிறது நடக்காது - மாஸாக பதில் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatti Rangaraj Explains The Controversies

ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி” இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News