70 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. யார் அந்த நடிகர் தெரியுமா

70 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. யார் அந்த நடிகர் தெரியுமா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

70 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. யார் அந்த நடிகர் தெரியுமா | Malavika Mohanan Going To Act With Chiranjeevi

இந்நிலையில், மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வால்டர் வீரய்யா பட இயக்குநர் பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 32 வயதாகும் நடிகை மாளவிகா, 70 வயதாகும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News