திருமணம் என்றாலே வெறுப்பு!! காமெடி நடிகை பிரியங்கா வாழ்க்கை இவ்ளோ சோகமா?

திருமணம் என்றாலே வெறுப்பு!! காமெடி நடிகை பிரியங்கா வாழ்க்கை இவ்ளோ சோகமா?

சினிமாத்துறையில் இருக்கும் பல நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

அந்தவரிசையில், மருதமலை படத்தில் 5 கணவரை வைத்திருக்கும் பெண்ணாக நடித்த நடிகை பிரியங்கா, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு இனி திருமணமே இல்லை என்ற முடிவில் இருக்கிறாராம்.

அவரின் இந்த முடிவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை, கணவரால் ஏற்பட்ட கஷ்டங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

திருமணம் என்றாலே வெறுப்பு!! காமெடி நடிகை பிரியங்கா வாழ்க்கை இவ்ளோ சோகமா? | Comedy Actress Priyanka Life History Update

அவர் கூறுகையில், நான் சினிமாவில் நடிக்கும்போதே திருமணமாகிவிட்டது. திருமணத்திற்கு பின் நடிக்கக்கூடாது என்று கணவர் சொன்னதால் நடிக்கவில்லை. அவருக்கு தஞ்சை மாவட்டம் என்பதால், நான் சென்னையை காலி செய்துவிட்டு அங்கு சென்றுவிட்டு 2 பெண் குழந்தைகள் பிறந்தது. அதன்பின் என் கணவர் என்னை பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து செய்துவிட்டார். நானும் தஞ்சையை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.

திருமணமாகி 6 வருடத்தில் விவாகரத்து பெற்றுவிட்டேன், அம்மாவுக்கு புற்றுநோய் என்பதால்ம் அவரை பார்த்துக்கொள்ள இங்கேயே இருந்துவிட்டேன். என் முன்னாள் கணவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது, ஆனால் எனக்கு இன்னொரு திருமணத்தில் விருப்பமே இல்லை. குழந்தைகளுடன் இப்படியே இருக்கவே விரும்புகிறேன்.

கடவுள் நமக்கு எழுதி வைத்தது இவ்வளவுதான் இருந்தேன், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி திருமணம் செய்யமாட்டேன். படத்தில் தான் 5 புருஷன் இருக்க மாதிரி காமெடிக்காக நடித்தேன், ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் ஒத்துவராது. எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களே போதும் திருமண வாழ்க்கை குறித்தே வெறுப்பா இருக்கிறது என்று பிரியங்கா பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 9வது வாரத்தில் எலிமினேட்டாகி வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News