கருப்புநிற ஆடையில் ஹாயாக போஸ்!! நடிகை திவ்யா துரைசாமியின் புகைப்படங்கள்..
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார்.

இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படம் நல்ல வசூல் செய்தது. இதில், வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஓம் காளி ஜெய் காளி என்ற தொடரில் மீனா என்ற ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா, தீபாவளிக்கு பின் எடுத்த கருப்புநிற ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




