ஜான்வி கபூருக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்.
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி, இன்று இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர். இவர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் தமிழில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த பதிவில், "Save the date 29th Oct" என அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஜான்விக்கு திருமணமா அல்லது காதலை அறிவிக்க போகிறாரா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அல்லது இந்த பதிவு படத்தின் ப்ரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. என்னவாக இருந்தாலும் 29ஆம் தேதி வரை அனைவரும் காத்திருந்துதான் பார்க்கமுடியும்.
