லிப் லாக் காட்சியா..வேண்டாம்...முத்திரை குத்திடுவாங்க!! ஆர்யன் பட நடிகை..
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள ஆர்யன் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இன்வஸ்டிகேடிவ் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய விஷ்ணு விஷால், படத்தின் நடிகை மானசா செளத்ரி படத்தில் லேட்டாக வந்தார். இருந்தபோதிலும் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு லிப்லாக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என மானசா செளத்ரியிடம் கேட்டோம்.

ஆனால் அவர் நான் ஏற்கனவே சில படங்களில் முத்தக்காட்சியில் நடித்துவிட்டேன். மீண்டும் அதுபோல் நடித்தால் எனக்கு முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறினார். அவர் சொன்னதை இயக்குநர் என்னிடம் சொன்னார்.

அவர் லிப்லாக் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் நான் இதுவரை லிப் லாக் காட்சியில் நடித்ததே இல்லை. ஆனாலும் ஒரு நடிகராகாவும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் லிப் லாக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.