எல்லை மீறிப் போகுது.. பதறிப் போன நிவேதா பெத்துராஜ்.. என்ன ஆச்சு?

எல்லை மீறிப் போகுது.. பதறிப் போன நிவேதா பெத்துராஜ்.. என்ன ஆச்சு?

நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமா மட்டும் இல்லாமல் கார் ரேஸிலும் ஆர்வம் கொண்டவர். அதற்காக பயிற்சிகள் எல்லாம் செய்து வருகிறார். தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் கதைகள் மொத்தமும் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுப்பதாகவும் தான் இருக்கின்றன. தனது எக்ஸ் பக்கத்தில் அவர் அவ்வப்போது சமூகம் குறித்து பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் இம்முறை கூறி இருப்பது என்னவென்றால் அது, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் குறித்துதான்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிவியலில் பெரிய புரட்சிதான். அறிவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது என்றால் அதை சரியானவற்றிகுப் பயன்படுத்தி நல்லதும் செய்ய முடியும், தவறான விஷயத்திற்கு பயன்படுத்தி கெட்டதும் செய்ய முடியும். இப்படி இருக்கும்போது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் மக்கள் தங்களது புகைப்படங்களை தங்கள் விருப்பப்படி மாற்றி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இப்போதும் கூட சாட்.ஜிபிடி, கூகுள் ஜெமினி , பெர்ப்ளக்ஸ் சிட்டி போன்ற பல ஏ.ஐ தொழில்நுட்பங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவற்றை நல்லதுக்கு பயன்படுத்துவர்கள் இருக்கையில், பிறரை ஏமாற்ற, மிரட்ட மார்ஃபிங் புகைப்படங்கள், மார்ஃபிங் வீடியோக்களை உருவாக்குவதிலும் சிலர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக உண்மையான வீடியோவை போலவே பல ஏ.ஐ வீடியோக்கள் அதிகம் பரவி வருகிறது. இது தொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது அவர், " அபத்தமான ஏ.ஐ வீடியோக்களை உண்மையானவையாகக் காட்டும் இந்தப் போக்கு மிகவும் மோசமானது.. சமீப காலங்களில் ஏ.ஐ வீடியோக்கள் மற்றும் அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக இருக்கிறது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அதில் ஒருவர், நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியுள்ளீர்கள். ஏ.ஐ நிச்சயமாக சக்தி வாய்ந்தது, ஆனால் அதன் தவறான பயன்பாடு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. போலி வீடியோக்கள், ஆடியோ அல்லது மக்கள் ஒருபோதும் செய்யாத விஷயங்களை சொல்வது அல்லது செய்வது போன்ற படங்களை உருவாக்கி பரப்புகிறார்கள். அதை ஏ.ஐ என்று கண்டுபிடிப்பதே சவாலானதாக உள்ளது. மேலும் வியக்கத்தக்க வகையில் உண்மையானதாக தெரிகிறது" என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News