இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள அஜித்.. யாருக்காக தெரியுமா
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்தது. ஆனால், இதில் குட் பேட் அக்லி படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

GBU படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
திரையுலகில் உள்ள பிரபலங்கள் குறித்து நமக்கு தெரியாத விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அப்படி தற்போது நடிகர் அஜித் செய்து நல்ல விஷயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில் தனது வீட்டின் சமையல்காரர், டிரைவர், தோட்டக்காரர்கள் என மொத்தம் 12 பேருக்கு தனித்தனியாக 1500 சதுர அடியில் வரிசையாக வீடு கட்டிக்கொடுத்துள்ளார் அஜித். மேலும், இந்த பகுதிக்கு அஜித் அவென்யூ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.