நான் கைது செய்யப்படவில்லை.. நடிகர் தினேஷ் வெளியிட்ட வீடியோ

நான் கைது செய்யப்படவில்லை.. நடிகர் தினேஷ் வெளியிட்ட வீடியோ

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தினேஷ். இவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், நடிகர் தினேஷ் நெல்லையில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் நடிகர் தினேஷை நேற்று கைது செய்துவிட்டதாக தகவல் பரவியது.

நான் கைது செய்யப்படவில்லை.. நடிகர் தினேஷ் வெளியிட்ட வீடியோ | Serial Actor Dinesh Clarify Video On Arrest

ஆனால், தற்போது நடிகர் தினேஷ் தான் கைது செய்யப்படவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது என்றும், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக தன்னை அழைத்து சென்றார்கள் என்றும் கூறி இருக்கும் நடிகர் தினேஷ், நான் தவறு செய்யவில்லை என ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News