அந்த ரோலில் நடிச்சேன்..வாய்ப்பே வரல..ஆனா!! நடிகை ஆண்ட்ரியா அதங்கம்..
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா. தற்போது, வெற்றிமாறன் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் அசோக் இயக்கத்தில் நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் பகிர்ந்து பல விஷயங்களை பேசி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், வட சென்னை படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்தப்பின் எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனால் பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் என்னை வைத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

உண்மையில் பல நடிகர்கள், அவர்கள் படங்களில் பவர்ஃபுல் பெண் கதாபாத்திரத்தை விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.