ஜாய் கிரிசில்டா மருத்துவரை பார்க்கணும்: ரங்கராஜ்க்கு ஆதரவாக பேசிய சகீலா

ஜாய் கிரிசில்டா மருத்துவரை பார்க்கணும்: ரங்கராஜ்க்கு ஆதரவாக பேசிய சகீலா

ஜாய் கிரிசில்டா- மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடிகை சகீலா பேசியது இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

ஜாய் கிரிசில்டா மருத்துவரை பார்க்கணும்: ரங்கராஜ்க்கு ஆதரவாக பேசிய சகீலா | Shakeela Open Up Madhampatty Rangaraj Joy Issues

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார்.

இந்த நிலையில், அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ்ந்த ஆதாரங்களை தினமும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஜாய் கிரிசில்டா மருத்துவரை பார்க்கணும்: ரங்கராஜ்க்கு ஆதரவாக பேசிய சகீலா | Shakeela Open Up Madhampatty Rangaraj Joy Issues

LATEST News

Trending News