ஆர்த்தி ரவி செமயா என்ஜாய் செய்றாங்களே, த்ரிஷாவும் கூட்டு.. வைரலாகும் போட்டோ!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.
ரவியுடன் எப்படியாவது சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என ஆர்த்தி எடுத்த முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியில்தான் முடிந்தது.
இந்த மன வலியில் இருந்து வெளிவர வெளிநாடுகளுக்கு செல்வது, தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பது என தனது கவனத்தை வேறு விஷயங்களில் ஈடுபடுத்திவருகிறார்.
அந்தவகையில் இப்போது சில புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதாவது ஆர்த்தி ரவி, திரிஷா, குஷ்பூ, பிருந்தா மாஸ்டார், ஆர்த்தியின் தாய் சுஜாதா, குஷ்பூவின் மகள் ஆகியோர் ஒரு வீட்டில் கூடி ஜாலியாக பேசி நேரத்தை செலவிட்டிருக்கின்றனர்.
அதிலும் அப்புகைப்படைத்தில் த்ரிஷாவும், ஆர்த்தியும் அதிகமாக சிரித்தபடி இருக்கிறார்கள். தற்போது, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

