நடிகை நயன்தாரா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா!
திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் பிறந்தநாள் அன்று அவர்களுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் பரவலாக பேசப்படும்.

அந்த வகையில் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம் வாங்க.
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.

மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். போயஸ் கார்டனில் உள்ள இவருடைய பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி ஆகுமாம்.

இதுமட்டுமின்றி 9Skin, Femi9 போன்ற பிராண்ட்களை துவங்கி, அதில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.