“பார்க்காததை பாத்த மாதிரி.. முதலிரவுக்கு முன்பே..” கணவன் செய்த கொடூரம்.. விவாகரத்து குறித்து கூச்சமின்றி கூறிய நடிகை!
பிரபல தமிழ் சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
'வம்சம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான சந்தியா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை கூச்சமின்றி பகிர்ந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சந்தியா ஜாகர்லமுடி, தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் பிரபலமான நடிகை. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 'வம்சம்' சீரியலில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த இவர், அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஆனால், அவரது திருமண வாழ்க்கை வெறும் இரண்டு நாட்ளிலேயே முடிவுக்கு வந்தது குறித்து அவர் அளித்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. பேட்டியில் சந்தியா கூறியதாவது:
"எங்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, திருமணமும் நடக்கவில்லை, முதல் இரவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டது. என்னுடைய செல்போனை அடிக்கடி வாங்கி சோதனை செய்வது போன்ற பழக்கம் அவருக்கு இருந்தது.
ஒரு முறை, வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜை பார்த்து விட்டு, ஏதோ பெரிய குற்றம் போல என்னிடம் நடந்து கொண்டார். அந்த மெசேஜ் என்னவென்றால், என்னுடைய நடிப்பை பாராட்டி ஒரு ரசிகர் அனுப்பியது. 'முன்பு பார்த்த சந்தியாவா இது? இப்போது ஆளே மாறிவிட்டீர்களே, அருமையாக நடித்திருக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தார்.
அதற்கு நான் பதில் கூட அனுப்பவில்லை. ஆனால், அதை ஏதோ தவறான விஷயமாக கருதி, மோசமான கேள்விகளை என்னிடம் கேட்டார். அதன் பிறகு விஷயங்கள் ஓரளவு சீராகின, திருமணம் நடந்தது. ஆனால், திருமணம் நடந்த இரண்டாவது நாளே, இவர் எனக்கான நபர் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. நான் எதிர்பார்த்த கணவன் இவர் இல்லை, அதேபோல அவர் எதிர்பார்த்த மனைவி நான் இல்லை என்பதை உணர்ந்தோம்.
அதனால், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து விட்டோம்." இந்த பேட்டியில் சந்தியா மேலும் கூறுகையில், "எனக்கு திருமணமானபோது 24 வயது தான். இப்போது இருக்கும் மெச்சூரிட்டி அப்போது இருந்திருந்தால், திருமணமான இரண்டாவது நாளே விவாகரத்து வாங்கியிருப்பேன்" என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.
இந்த வெளிப்படைத்தன்மை, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்கள் அவரது தைரியத்தை பாராட்டியுள்ளனர், அதேசமயம் சிலர் திருமண உறவுகளில் நம்பிக்கை மற்றும் புரிதல் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தியா ஜாகர்லமுடி தற்போது சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது இந்த பேட்டி, பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது.