ஹீரோயின் முன் ரொமோ ஆக்டிங்!! ஏர்போர்ட்டில் அந்நியனாக மாறிய பாலைய்யா..வீடியோ..
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணன் நடிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி அகண்டா 2 படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், படத்தின் ஹீரோயின் சம்யுக்தா பேசியபோது, பாலைய்யா கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் பரவி வைரலாகியது.
இதனையடுத்து பாசத்துக்கு முன்னாடி தான் பனி..பகைக்கு முன்னாடி புலி.. என்ற டயலாக்-ஐ போல பாலைய்யா விமானநிலையத்தில் கோபப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
பிரமோஷனுக்காக விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ள பாலைய்யா, விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்து ஆட்டோபிராஃப் எல்லாம் போட்டு வந்தார்.

அதன்பின் அங்கிருந்த ஒரு ரசிகர், நெருங்கி வருவதை பார்த்து தன் பாதுகாவலரை அழைத்து, அந்த நபரை அருகில் விடவே கூடாது, அவன் என் கண் முன்னாடி வரவேக்கூடாது என்று கத்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.