அபுநய் என்னை உருகிஉருகி காதலிச்சான்!! கல்யாணமாக நடிகை கொடுத்த ஷாக்..

அபுநய் என்னை உருகிஉருகி காதலிச்சான்!! கல்யாணமாக நடிகை கொடுத்த ஷாக்..

துள்ளுவதோ இளமை படத்தில் முக்கிய ரோலில் அடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அபிநய். இப்படத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்த அபிநய், அதன்பின் ஆளே காணாமல் போனார். கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் போக அனைவரது கவனத்தையும் ஈர்த்து, பலரும் அவருக்கு உதவினர். கடந்த மாதம் உடல்நிலை மோசமானதால் வீட்டில் தனியாக இருக்கும்போதே காலாமிவிட்டார். இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அபுநய் என்னை உருகிஉருகி காதலிச்சான்!! கல்யாணமாக நடிகை கொடுத்த ஷாக்.. | Actress Ashwini Reveals His Unspoken Love Abinay

இந்நிலையில், அபிநய் பற்றி நடிகை அஸ்வினி என்பவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், அபிநய் என்னை உருகி உருகி காதலித்தான். அவன் காதலை நான் நிராகரிச்சுட்டேன். நான் பயப்படுகிறேன் என்று நினைத்து அவன் அவனுடைய அம்மாவையும் அழைத்து வந்தான். உண்மையில் அப்போதுதான் எனக்கு பயம் இன்னும் அதிகரித்தது. பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டோம். ஆனால் அவன் மீது காதல் வரவில்லை, பயம் தான் அதிகரித்தது.

அபுநய் என்னை உருகிஉருகி காதலிச்சான்!! கல்யாணமாக நடிகை கொடுத்த ஷாக்.. | Actress Ashwini Reveals His Unspoken Love Abinay

என்னுடைய பயத்திற்கு காரணம் அவனுடைய அழகுதான். இவ்வளவு அழகாக இருப்பவன் என்னை ஏன் காதலிக்க வேண்டும் என்று என்மீது தாழ்வு மனப்பான்மை வந்தது. காதல் வேண்டாம் அபி, நட்பே போதும் என்றேன், மறுத்தான், எவ்வளவோ சொன்னேன், குடுப்பழக்கத்தை விடும்படி, அவன் கேட்கவில்லை.

அம்மா தான் பாவம் உன்னை திருமணம் செய்தால் அவன் திருந்திடுவான் நீ வருந்தாதே நான் இருக்கிறேன் என்று சொன்னார்கள். அவனையும் குடியை விட சொல்லி கெஞ்சினார்கள், முடியாது என்று மறுத்தான் காதலா மதுவா என்ற போராட்டத்தில் மதுவை மட்டும் பற்றி கொண்டான்..

அன்று நடந்த சண்டை நான் செத்தா கூட என் முகத்தில் முழிக்காதே நீ செத்தாலும் நான் வருவேன் என்று நினைக்காதே என்று சொல்லி சண்டையிட்டு பிரிந்தோம் உன்னுடன் நட்புகூட வேண்டாம் என்று .எவ்வளவோ அம்மா முயற்சி செய்தார்கள் என் மனம் இடம் தரவில்லை அவனை ஏற்க்க..ஒரு கட்டத்தில் அழைத்தான்.

அபுநய் என்னை உருகிஉருகி காதலிச்சான்!! கல்யாணமாக நடிகை கொடுத்த ஷாக்.. | Actress Ashwini Reveals His Unspoken Love Abinay

அம்மாவும் போய் சேர்ந்து விட்டார்கள் , நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன் வருகிறாயா என்று..சொல் பேச்சு கேட்காமல் நீ மதுவை நாடி என் மனதை நோகடித்தாய் , மன்னித்து விடு எனக்கு மணமாகி விட்டது என்றேன்..இருப்பினும் அழைத்தான் நீ சொன்னதை போல் குடியால் நோயில் அவதி படுகிறேன் என் நிழலை கூட நீ பார்க்காதே கவலையும் படாதே இது என்னக்கு ஒரு பாடம் குடியால் வாழ்பவர்களுக்கு என் சாவு ஒரு பாடமாக இருக்கும் என்றான்..

அன்று வராத காதல் இன்று அவன் மீது வந்திருக்க அவனோ காற்றோடு கலந்திருந்தான் என்று அந்த பதிவில் நடிகை ஸ்ரீ அஸ்வினி தெரிவித்துள்ளார். இந்த பதிவினை பார்த்த பலரும் ஒருவர் இறந்தப்பின் ஏன் இந்த பதிவு என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery

LATEST News

Trending News