தொழிலதிபருடன் கிசுகிசு...தயாரிப்பாளர் என்னிடம் அப்படி கேட்டார்!! பிரபல நடிகை ஓபன் டாக்

தொழிலதிபருடன் கிசுகிசு...தயாரிப்பாளர் என்னிடம் அப்படி கேட்டார்!! பிரபல நடிகை ஓபன் டாக்

தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்தும் தற்போது அரசியல் விமர்சகராக இருந்து வருபவர் தான் நடிகை கஸ்தூரி சங்கர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தொழிலதிபருடன் கிசுகிசு...தயாரிப்பாளர் என்னிடம் அப்படி கேட்டார்!! பிரபல நடிகை ஓபன் டாக் | Kasthuri Linked To Businessman In Rumors

அதில், ரஜிகாந்த் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வந்த போது வரென் வரேன்னு சொல்லி, காலம் கடத்திட்டே இருக்காரே என்று நான் அவரை நிறைய விமர்சித்தேன்.

ஒருமுறை அமெரிக்காவில் என்னை ரஜினி அழைத்து பேசியபோது, தன்னுடைய அரசியல் திட்டங்களை என்னிடம் சொல்லி, தன் சார்பாக மக்கள் மன்றத்தில் செய்தித் தொடர்பாளராக பேச வேண்டும் என்று கேட்டார், அதன்படியே ரஜினி சார்பாக பேசினேன். பின் அவரை நேரில் 2 முறை சந்தித்து பேசி, ரஜினியின் அரசியல் தொடக்கத்திற்காக நிறைய பணிகள் செய்தேன், ஆனால் அவர் அரசியலுக்கு வராமலே போய்விட்டார்.

தொழிலதிபருடன் கிசுகிசு...தயாரிப்பாளர் என்னிடம் அப்படி கேட்டார்!! பிரபல நடிகை ஓபன் டாக் | Kasthuri Linked To Businessman In Rumors

மேலும் நான் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்க 2 முக்கிய காரணங்கள் இருந்தது. என்னை பற்றி ஒரு வதந்தி பரவியது. மூத்த பெரிய தொழிலதிபர் ஒருவருடன் என்னை வைத்து பேசப்பட்டது. இது எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இப்ராஹிம் ராவுத்தரே என்னிடம், உங்களை சினிமாவில் புக் செய்தால், சரியாக ஷூட்டிங் வரமாட்டீங்கள், நீங்கள் பெரிய இடம் என்றார்.

அந்தளவுக்கு என்னை பற்றி வதந்தி பரவியது. ஆனால் என்னுடைய கிசுகிசுக்கப்பட்ட அந்த நபரை நான் கிரிக்கெட் போட்டியில் ஒரேவொரு முறை தான் பார்த்திருக்கிறேன், ஆனால் தவறான செய்தி நெருப்புப்போல் பரவியது. நான் நெருப்பு என்பது என்னுடைய பெற்றோருக்கு தெரியும். என் மீதான் நம்பிக்கை அவர்களுக்கு எப்போதுமே போகாது..

ஆனால் வதந்திகளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மகளின் பெயர் கெடுகிறதே, நாளைக்கு திருமணம் நடக்காமல் போய்விடுமோ? என்று பயந்தார்கள். அதுவும் இல்லாமல் என் அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதனால்தான் என் கல்யாணத்தை செய்வது என்று முடிவானதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News