உச்சத்தில் இருந்த ஹீரோயின்..இப்போ யாரையும் தெரியாது!! மறதியால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

உச்சத்தில் இருந்த ஹீரோயின்..இப்போ யாரையும் தெரியாது!! மறதியால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

80, 90களில் தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா.

1983ல் மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிய பானுப்பிரியா, தன்னுடைய வசீகரிக்கும் அழகு மற்றும் நடிப்பால் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு இயக்குநர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறினார்.

உச்சத்தில் இருந்த ஹீரோயின்..இப்போ யாரையும் தெரியாது!! மறதியால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை | Super Star Heroine Began Suffering Memory Loss

தமிழை தாண்டி, தெலுங்கிலும் நடித்து புகழ்பெற்ற பானுப்பிரியா, 1998ல் ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் திரைப்படங்களில் அவ்வப்போது மட்டுமே நடித்து வந்தார்.

தம்பதியருக்கு அபிநயா என்ற மகள் பிறக்க திருமணமாகி 7 ஆண்டுகளில் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட, 2005ல் விவாகத்து பெற்று பிரிந்தனர்.

பானுப்பிரியாவின் கணவர் 2018ல் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைய, அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது. இதனையடுத்து பானுப்பிரியா தனது நியாபங்களை மறக்கத்தொடங்கினார்.

இது அவரது அன்றாட வேலைகளையும் வாழ்க்கையையும் பாதித்தது. சிறுவயதில் நடனத்தை கற்றுக்கொண்டு பிரபலமான பானுப்பிரியா, ஒருக்கட்டத்தில் நடனத்தையும் மறந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த பானுப்பிரியா சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News