நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு

ஏஐ தொழில்நுட்பம் பிரபலங்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பெரும் புயலைக் கிளப்பியது. மத்திய அரசும் இதில் தலையிட்டது. சமீபத்தில் ஸ்ரீலீலாவும் இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்டார். தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், பயங்கரமாக மாற்றக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸும் ஏஐ புகைப்படத்தால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

தனது புகைப்படங்களை AI மூலம் மார்ஃபிங் செய்வது குறித்து நிவேதா தாமஸ் கோபத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தனது புகைப்படங்களை ஏஐ மூலம் மார்ஃபிங் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தனது தனிப்பட்ட தனியுரிமை மீதான தாக்குதல் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ். தேவையற்ற விஷயங்களைப் பகிர்ந்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகை நிவேதா தாமஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் சேலையில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் அவரது அழகில் மயங்கிப்போயினர். ஆனால் அந்த புகைப்படத்தைக் காட்டிலும் அவரது ஏஐ புகைப்படம் காட்டுத்தீ போல் பரவியதால் தான் நிவேதா தாம்ஸ் இந்த ஆவேச பதிவை போட்டிருக்கிறார்.

நடிகை நிவேதா தாமஸ் தமிழில் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதுதவிர ரஜினியின் மகளாக தர்பார் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நவீன சரஸ்வதி சபதம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா.

LATEST News

Trending News