தனுஷுடன் நான்..எதிர்ப்பார்க்கவில்லை..மனம் திறந்து பேசிய நடிகை மிருணாள் தாகூர்..
மராத்தி சினிமாவில் அறிமுகமாகி இந்தி திரையுலகில் கால்பதித்து தற்போது டாப் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை மிருணாள் தாகூர். அவர் நடிப்பில் இன்று பிப்ரவரி 20 ஆம்தேதி Do Deewane Seher Mein என்ற படம் ரிலீஸாகியுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் கலந்து கொண்டதை வைத்தும் மிருணாளுடன் நெருக்கமாக பழகியதை வைத்தும் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விரைவில் மிருணாள் தாகூரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் தனுஷ் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் நல்ல நண்பர் என்று கூறினார் மிருணாள் தாகூர்.
மேலும், எனக்கென இதுவரை நான் தனியார் PR டீம் வைத்துக்கொண்டதில்லை. இனிமேல் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 10 கோடி ரூபாய் செலவு செய்திருந்தால் கூட எனக்கு இந்தளவிற்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. இல்லாதவற்றை பேசி இருப்பதுபோல் பேசி என்னை பெரிய ஆளாக்கிவிட்டார்கள் என்று கூறியிருந்தார். சமீபத்தில் மிருணாள் தாகூர், தனுஷ் குறித்து மீண்டும் பேசியிருக்கிறார்.

அதில் மிருணாள் தாகூர், ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் போன்ற படங்களை பார்த்தப்பின் தனுஷின் ரசிகையாகிவிட்டேன். அசுரன் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அற்புதமான நடிகர், பாடலாசிரியர், பாடகர், நடன கலைஞர், இயக்குநர்.
தேரே இஷ்க் மே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் நான், நீங்கள் சன் ஆஃப் சர்தார் 2 ஸ்கிரீனிங்குக்கு வர முடியுமா? என்று கேட்டேன். அவர் உண்மையிலேயே வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் வந்தார், அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னுடைய வாழ்க்கையில் அது இனிமையான தருணம். ஒருநாள் அவருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று பேட்டியில் மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.