ஈரான் - இஸ்ரேயல் போர் பதற்றம்!! துபாயில் அஜித் எப்படி இருக்கிறார்.. வெளியான தகவல்...

ஈரான் - இஸ்ரேயல் போர் பதற்றம்!! துபாயில் அஜித் எப்படி இருக்கிறார்.. வெளியான தகவல்...

ஈரான் மீது இஸ்ரேயல் மற்றும் அமெரிக்கா நடத்தும் ஏவுகணை தாக்குதல்கள் உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலை, துபாய், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இப்படியிருக்கையில் ஐக்கிய அமீரக நாடுகள்களில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி பலருக்கும் இப்போது வரை இருந்து வருகிறது. அதேபோல் அரபு நாடுகளுக்கு சென்ற பிரபலங்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

ஈரான் - இஸ்ரேயல் போர் பதற்றம்!! துபாயில் அஜித் எப்படி இருக்கிறார்.. வெளியான தகவல்... | Ajithkumar Safe In Dubai Manager Suresh Chandraஇந்நிலையில் நடிகர் அஜித், இந்த அண்டில் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. கார் ரேஸில் தீவிரமாக இருப்பதால் துபாயில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளுயாகின. தற்போது துபாயில் பதற்றமான சூழலில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. பலரும் இதுதொடர்பாக இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

ஈரான் - இஸ்ரேயல் போர் பதற்றம்!! துபாயில் அஜித் எப்படி இருக்கிறார்.. வெளியான தகவல்... | Ajithkumar Safe In Dubai Manager Suresh Chandraதற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சுரேஷ் சந்திரா, அஜித் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறார். ரசிகர்கள் அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும், நடிகர் அஜித்தின் பயணத் திட்டத்தின்படி அவர் இன்றைக்கு சென்ன்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் தற்போது விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் துபாயிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் மிகவும் பத்திரமாகவே இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News