தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடமில்லையா... ஆரி கடும் தாக்கு
ஆரி தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை படம் மூலம் கவனம் ஈர்த்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழ் வாங்கி தந்தது.
அதை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் இவர் நடத்தும் ஷோ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் ஆரி நடிப்பில் சமீபத்தில் வந்த 4th floor படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, ஆனால், ஆரி ஒரு தமிழன் நடித்த படத்துக்கு தமிழகத்தில் மல்டிப்ளக்ஸில் ஷோ இல்லை என கடுமையாக பேசியுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
