சங்கீதாவை மோசமாக பேசும் விஜய்யின் ஆதரவாளர்கள்!! கண்டிக்காத விஜய்மீது கொந்தளித்த மாதர் சங்கம்..
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள விவகாரம் தற்போது காட்டுத்தீப்போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தன் கணவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்ரம் சுமத்தியது மட்டுமில்லாமல், தேவைப்பட்டால் ஆதாரங்களையும் நடிகையின் பெயரையும் சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

மேலும் ஜீவனாம்சமும் விஜய் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இப்படியிருக்கையில் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள் பலர், இணையத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக விஜய் மற்றும் அவரது வழக்கறிஞர் சார்பில் எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், விஜய் - சங்கீதா இடையிலான விவாகரத்து மனு தாக்கல் என்பது தனிப்பட்ட சட்ட நடைமுரை. இதை சோசியல் மீடியாக்களில் ஆபாசமாக விவாதிக்கவோ, இழிவுப்படுத்தவோ யாருக்கும் உரிமையில்லை. விஜய்யின் பெயரை கூறிக்கொண்டு அவரது தொண்டர்கள் சங்கீதாவிற்கு எதிராக ஆணாதிக்க வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்களை பரப்பி வருகிறார்கள்.
இது கருத்துச் சுதந்திரம் இல்லை, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பொது வாழ்விற்கு வந்தப்பின் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் தவெக தலைவர் விஜய் மெளனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மெளனம், வன்முறைக்கு வழங்கப்படும் மறைமுக ஒப்புதாக அமையும். ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்தவித ஆணாதிக்க சமூக வலைத்தள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும்.
இதுவொரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் சமூக பொறுப்பாகும். ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த சைபர் குற்றப்பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விஜய்யை ஏன் இன்னும் தன்னுடைய மனைவிக்கு எதிரான ஆபாச பதிவுகளுக்கு எதிராக வாய்திறக்கவில்லை என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.