விஜய்-சங்கீதா பற்றிய கேள்வி பிரபல நடிகர் சொன்ன கொஞ்சமும் எதிர்பாரா பதில்

விஜய்-சங்கீதா பற்றிய கேள்வி பிரபல நடிகர் சொன்ன கொஞ்சமும் எதிர்பாரா பதில்

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் (extramarital affair) இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இது 2021-ம் ஆண்டு முதலே தெரிந்திருந்தும், குழந்தைகளின் நலனுக்காக தாமதமாக்கியதாகவும், மன உளைச்சல், அவமானம் போன்ற காரணங்களால் இப்போது விவாகரத்து கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நடிகர் ஆரி (Aari) தனது கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

நடிகரா மட்டுமல்ல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்குமே உரிமை இல்லை. பொது வாழ்க்கைக்கு வரும்போது இதுபோன்ற விஷயங்கள் விவாதப் பொருளாகிறது என்றாலும், இது எல்லாருக்கும் நடக்கக்கூடியது.

சமூக ஊடகங்கள் பெருகியதால், முன்பு போல பத்திரிகையாளர்கள், மீடியா மக்கள் மட்டுமே செய்தி போடாமல், இப்போது எந்த சரிபார்ப்பும் இல்லாமல் (clean செய்தி) போடப்படுகிறது. இதனால் உண்மை தாமதமாகத் தெரியும் அல்லது தவறான கதைகள் பரவுகின்றன. இது ஆபத்தான சூழல்.

அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது, காரணம் என்ன என்பது நமக்குத் தெரியாது. விவாகரத்து யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது இருவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் தனி மனிதனாக கருத்து சொல்வது சரியல்ல.

"அடுத்தவர் பாத்ரூமை எட்டிப் பார்க்க உரிமை இல்லை" என்று உதாரணமாகக் கூறி, பெட்ரூம், பாத்ரூம் போன்ற தனிப்பட்ட விஷயங்களை ஆராயும் கலாச்சாரம் அசுத்தமானது எனவும், அதைத் தவிர்ப்பது நல்லது என்றும் வலியுறுத்தினார்.

நாளைக்கு நமக்கோ, நமது குடும்பத்தினருக்கோ இதுபோன்ற சூழல் வரலாம் என்பதால், நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அரசியல் தாக்குதல்கள் வேறு, ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள் எல்லாருக்கும் நடக்கலாம் என்றும், அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரியின் இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பலர் இதை ஆதரித்து வரும் நிலையில், விஜய்-சங்கீதா விவகாரம் தொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன.

LATEST News

Trending News