சங்கீதா அகதியா..கண்ணகி..விஜய் ஏன் வாய்திறக்கல!! விளாசிவிட்ட புலம்பெயர் இலங்கை தமிழர்..

சங்கீதா அகதியா..கண்ணகி..விஜய் ஏன் வாய்திறக்கல!! விளாசிவிட்ட புலம்பெயர் இலங்கை தமிழர்..

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கும் சூழலில், பல பிரபலங்கள் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். விஜய்யின் மனைவி சங்கீதாவை மிகவும் மோசமாக பலர் விமர்சித்தும் வருகிறார்கள். இப்படியிருக்கையில் ஜெர்மனியிலுள்ள புலம்பெயர் இலங்கைத் தமிழரும் எழுத்தாளருமான தனுஜா என்பவர் சங்கீதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சங்கீதா அகதியா..கண்ணகி..விஜய் ஏன் வாய்திறக்கல!! விளாசிவிட்ட புலம்பெயர் இலங்கை தமிழர்.. | Transgender Writer Thanuja Support To Sangeethaதனுஜா வெளியிட்ட வீடியோவில், முதலில் சங்கீதா இதுபோல் விவாகரத்திற்கு விண்ணப்பித்தாரா? இல்லையா? என்பதே எனக்கு சந்தேகமாகவுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் இருவரும் வாய் திறக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும், சங்கீதா விவாகரத்து கேட்டுள்ளார் என்றதும் விஜய் ரசிகர்கள் பலரும் சங்கீதாவை தனிமனித தாக்குதல் நடத்துகிறார்கள். அகதி என்றும் கூறுகிறீர்கள். பெண் என்ற காரணத்தால் மிகவும் மோசமாக விமர்சிக்கிறீர்கள். சங்கீதா கணவர் விஜய் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்துகிறார் என்றால், சிலப்பதிகாரம் கண்ட தமிழ்நாடு, பாதிக்கப்பட்ட பெண் என்ன சொல்கிறார் என்று காதுகொடுத்து கேட்கவேண்டும் அல்லவா.

சங்கீதா அகதியா..கண்ணகி..விஜய் ஏன் வாய்திறக்கல!! விளாசிவிட்ட புலம்பெயர் இலங்கை தமிழர்.. | Transgender Writer Thanuja Support To Sangeethaகண்ணகி போல் வாழ்ந்த சங்கீதாவை விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்கள். இத்தனை நாட்களாக விஜய்யின் மனைவியாக கடந்த 28 ஆண்டுகளாக இருந்த சங்கீதாவை மிகவும் மோசமாக விமர்சிக்கிறீர்கள், இது சரியல்ல. சங்கீதாவை மோசமாக விமரிக்கிறீர்கள் என்றால் அது விஜய்யை மோசமாக விமர்சிப்பதை போலத்தானே. நாளைக்கு இதெல்லாம் ஃபேக் நியூஸ் என்று சொன்னால் நீங்கள் முகத்தை கொண்டு எங்கு போய் வைப்பீர்கள்.

மேலும், சங்கீதா எங்குமே தன்னுடைய பணம், படிப்பு போன்றவற்றை வெளிக்காட்டி பந்தாகாட்டியவர் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னை ஒரு இலங்கை தமிழச்சி என்று சொன்னதில்லை. அவரும் அவரது வேலையுமாகவே இருந்துள்ளார். அதைவிட்டுவிட்டு அவரையும் அவர் சார்ந்த இலங்கை தமிழர் இனத்தையும் இலங்கை தமிழ் மண்ணையும் விமர்சிப்பது தவறு மற்றும் நாகரீகமற்ற செயல் என்று பேசியிருக்கிறார் தனுஜா.

LATEST News

Trending News