மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்? தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? வீடியோவைப் பாருங்க

மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்? தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? வீடியோவைப் பாருங்க

சென்னை: தமிழில் உள்ள யூடியூப் சேனல்களில் மைக் செட் யூடியூப் சேனல் இணையவாசிகள் மத்தியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீராம் என்பவர் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனல் அதன் தொடக்க காலத்தில் இருந்தே, நகைச்சுவையான கண்டண்ட்களுக்கு மட்டுமே பெயர் பெற்றது. அவ்வப்போது எது எல்லாம் டிரெண்டிங்கில் உள்ளதோ, மக்களுக்கு மிக நெருக்கமாக உள்ளதோ, அது தொடர்பாக நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு வருவதை அவரும் அவரது சேனலைச் சேர்ந்தவர்களும் செய்து வருகிறார்கள். தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் குறித்து நையாண்டி தனமாக மைக் செட் யூடியூப் சேனலில் போடப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த வீடியோவை நீக்க சொல்லி அவரை பலரும் மிரட்டுவதாக மைக்செட் ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, " மைக் செட் யூடியூப் சேனலில் தேர்தல் தொடர்பாக நாங்கள் ஒரு வீடியோ வெளியிட்டோம். அந்த வீடியோவை வெளியிட்டதில் இருந்து, பலரும் எங்களுக்கு போன் செய்து, வீடியோவை நீக்க சொல்லியும் அவர்களது கட்சியை நாங்கள் விமர்சித்து உள்ளதாகவும் கூறி வீடியோவை டெலிட் செய்யச்சொல்லி மிரட்டி வருகின்றனர். வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால் நாங்கள் டெலிட் செய்து விடுவோம், அல்லது டெலிட் செய்யவைப்போம் என்றும் மிரட்டுகிறார்கள்.

வீடியோவை டெலிட் செய்ய முடியாது: யார் என்ன மிரட்டு மிரட்டினாலும் நான் அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். வீடியோ போடுவதும் அதன் மூலம் எனது கருத்தைச் சொல்வது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசியுள்ளார்.
 

விஜய் ரசிகர்களா?: அவரது இந்த வீடியோவைப் பார்த்த பின்னர் இணையவாசிகள் பலரும் தவெகவினர் தான் மைக் செட் யூடியூப் சேனலையும் மைக் செட் ஸ்ரீராமையும் மிரட்டுகிறார்கள் என்றும், குறிப்பாக வீடியோவில் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இடம்பெற்ற பாடலைப் பயன்படுத்தி உள்ளதால், காப்புரிமை பிரச்னையை எழுப்பி, அதன் மூலம் வீடியோவை நீக்க வைப்போம் என்றும் மிரட்டி உள்ளார்கள் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES