உலகளவில் இதுவரை கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, அந்த படங்களின் தயாரிப்பாளர்களே வசூல் எவ்வளவு என்று அறிவித்து விடுகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் கருப்பு. சூர்யாவின் திரை வாழ்க்கையில் கடந்த 13 ஆண்டுகளாக அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது இப்படியொரு திரைப்படத்தைதான்.

கடந்த மே 15ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஒவ்வொரு திரையரங்கையும் திருவிழா கோலமாக மாற்றியது. சிலருக்கு சாமி வந்து ஆடியது கூட இணையத்தில் வைரலானது.
வசூல்
இப்படி மெகா பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ள கருப்பு 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருந்தது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
