பெத்தி திரைப்படம் எப்படி உள்ளது.. வெளிவந்த விமர்சனம் இதோ

பெத்தி திரைப்படம் எப்படி உள்ளது.. வெளிவந்த விமர்சனம் இதோ

பெத்தி

இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

மேலும் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

பெத்தி திரைப்படம் எப்படி உள்ளது.. வெளிவந்த விமர்சனம் இதோ | Peddi Movie Twitter Review

இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று பெத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

வெளிவந்த விமர்சனம்

 

இதில், இப்படம் வழக்கமான திரைக்கதையில் நகரும் கமர்ஷியல் என்டர்டைனர்; முதல் பாதி படம் ஆவரேஜ் ஆக உள்ளது என்றும், ஜான்வி கபூர் காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாம் பாதி ஏற்ற இறக்கங்களுடன் நகர்கிறது, கிளைமாக்ஸ் சிறப்பாக முடிகிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

 

பெத்தி திரைப்படம் எப்படி உள்ளது.. வெளிவந்த விமர்சனம் இதோ | Peddi Movie Twitter Review

ராம் சரண் பிரமாதமாக நடித்துள்ளார். அவர் ஒருவரே இப்படத்தை முழுமையாக தனது தோளில் சுமந்து செல்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை நன்றாகப் பொருந்தி, மற்றொரு சிறப்பம்சமாக இப்படத்திற்கு அமைந்துள்ளது. இயக்குநர் புச்சிபாபு நேர்மையாக இப்படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால், திரைக்கதை மற்றும் எடிட்டிங் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என எக்ஸ் தளத்தில் விமர்சனம் தெரிவித்துள்ளனர். 

 

LATEST News

Trending News

HOT GALLERIES