பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

மீசைய முறுக்கு 2

ஒவ்வொரு வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு 2. இப்படத்தை அவரே இயக்கி, இசையமைத்திருந்தார். நகைச்சுவை, எமோஷன் என மக்களை என்டர்டைன் செய்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Worldwide 5 Days Collection

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கருணாஸ், கெத்திகா ஷர்மா, சைத்ரா, நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் கானா பாடல் மற்றும் பாடகர்களின் வாழ்க்கை குறித்து பேசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதேபோல் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Worldwide 5 Days Collection

 

பாக்ஸ் ஆபிஸ்

மீசைய முறுக்கு 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் நிறைவடைந்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ளது. முதல் மூன்று நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தின் வசூல் குறைந்துள்ளது. ஆனால், இந்த வார இறுதியில் கண்டிப்பாக வசூல் அதிகரித்து மீண்டும் மீசைய முறுக்கு 2 வசூல் வேட்டையாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LATEST News

Trending News